சென்னை, புறநகரில் கொட்டித் தீர்த்த மழை... மக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம் - மீட்புப் பணிகள் தீவிரம்!

 
மழை வெள்ளம் சென்னை கனமழை

வங்கக்கடலில் வலுவிழந்த 'டிட்வா' புயலின் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னை அருகே கரையை கடப்பதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை கொட்டித் தீர்த்தது. இதன் விளைவாக, பல முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாக மாறி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை விட்டு விட்டுப் பெய்த தொடர் மழையால், தாழ்வான பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன: வேளச்சேரி, பட்டாளம், கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை மற்றும் பெரம்பூர் பிரதான சாலைகளில் தண்ணீர் முழுமையாகத் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் நீர் தேங்கியதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.

மழை கனமழை

கொரட்டூர் ஓம்சக்தி நகர் மற்றும் செங்குன்றம் குமரன் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். போரூரை அடுத்த வேலப்பன்சாவடி பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிய கார் மற்றும் வேன் ஆகியவை கிரேன்கள் உதவியுடன் மீட்கப்பட்டன. தி.நகரில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெள்ளம் ஆட்டோ கனமழை மழை

தொடர்மழையின்போது நகரின் 48 இடங்களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் உடனடியாக அகற்றினர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் சென்னையில் மொத்தம் 215 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரையிலான காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 2 அன்று மட்டும் 2.23 லட்சம் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் மழைநீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, இயல்பு வாழ்க்கையை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!