இன்று சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த சில மணிநேரங்களுக்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. டிட்வா புயல் வலுவிழந்த நிலையில், தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'டிட்வா' புயல் வலுவிழந்த நிலையில், தற்போது சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகக் கரையைக் கடந்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழையின் தீவிரம் குறைந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த சில மணிநேரங்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது:
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
