சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

 
மழை விடுமுறை

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான 'டித்வா' புயலின் காரணமாகத் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், இன்று காலை வெளியான வானிலை அறிவிப்பில், சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதனால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (04.12.2025) காலை 7 மணியளவில் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், 

கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 

பள்ளி கல்லூரி விடுமுறை மாணவிகள் மழை

மழை எச்சரிக்கை காரணமாகச் சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04.12.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு எவ்விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!