இன்று மாலை சென்னை உட்பட 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
மழை

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 29 மாவட்டங்களில் இன்று மாலை மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நேரத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக பயணங்களைத் திட்டமிடும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மழை

மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:  பின்வரும் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது: கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், , சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர்.

மழை

லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: பின்வரும் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது:அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!