இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
மழை மழை

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மழை

இன்று அதிகாலை வேளையில் வட தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் காணப்பட்டது. குறிப்பாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவியது.

லட்சத்தீவு - கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனுடன் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடும் இணைந்துள்ளதால், தமிழகத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது.

மழை

தைப்பூசம் மற்றும் விடுமுறை நாளான இன்று, வெளி இடங்களுக்குச் செல்பவர்கள் இந்த வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!