இன்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
2026-ம் ஆண்டின் முதல் நாளான இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று மழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, கரூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:

சென்னையைப் பொறுத்தவரை அதிகாலை முதலே சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், லேசான தூறல் மழையும் பெய்து வருகிறது. புத்தாண்டு தினமான இன்று குளிர்ச்சியான வானிலை நிலவுவது சென்னை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
