இன்று தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு... தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு மஞ்சள் எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வானிலை அமைப்புகள் வலுவிழந்த நிலையில், தற்போது அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை மாவட்டங்கள்: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (டிச.5) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று முதல் டிசம்பர் 10-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று (டிசம்பர் 4) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அதிகபட்சமாகப் பலத்த மழை பதிவானது.

சென்னை மாவட்டம் மணலி புதுநகரத்தில் 240 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து, எண்ணூா் (திருவள்ளூா்) 210 மி.மீ., விம்கோ நகா் 200 மி.மீ. மற்றும் கத்திவாக்கம் (சென்னை) 160 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
