இன்று முதல் தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

 
மழை

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜனவரி 5) முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தெற்கு கேரள கடலோரப் பகுதியை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பூமத்திய ரேகையை ஒட்டி மற்றொரு சுழற்சி காணப்படுகிறது.

மழை

இன்று மற்றும் நாளை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மட்டுமல்லாது இன்று முதல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.

மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இருப்பினும், அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்பட வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்பதால் குளிர் சற்று அதிகமாக இருக்கும்.

மழை கனமழை

வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!