தமிழகத்தில் டிச.11 வரை மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!

 
மழை

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று டிசம்பர் 6ம் தேதி முதல் வரும் டிசம்பர் 11ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை

தற்போதுள்ள வானிலைச் சூழலின் காரணமாக, தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் டிசம்பர் 9-ஆம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை ஒக்கியம் துரைபாக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் தலா 7 செமீ மழையும், செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் மற்றும் சென்னை புழலில் தலா 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!