இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... பத்திரம் மக்களே!
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டுக் கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 3, 2025) மூன்று மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
மிகக் கனமழை மாவட்டங்கள் மட்டுமின்றி, மேலும் சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக இருக்குமாறும், தேவைப்பட்டால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
