இன்று தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... புதிய காற்றழுத்த தாழ்வுபகுதியால் வெளுக்கப் போகுது மழை!
இன்று தமிழகத்தில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.

இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
