அதி கனமழை... இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை தொடரும் என்று அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று டிசம்பர் 2ம் தேதி சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று டிசம்பர் 2ம் தேதி மழையின் தாக்கம் நீடிக்கும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்: சென்னை (ரெட் அலர்ட்), திருவள்ளூர் (ரெட் அலர்ட்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று டிசம்பர் 1ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கனமழை பெய்த போதிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
பள்ளி விட்டு வீடு திரும்ப முடியாமல் மாணவர்கள் தவித்தனர். இந்த நிலையைத் தவிர்க்கும் விதமாக இன்று மழையின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், முன்கூட்டியே விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
