ஸ்காட்லாந்தில் கடும் பனிப்பொழிவு... சாலைகளில் கார் மோதி விபத்து.. 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்!

 
ஸ்காட்லாந்து பனிமூட்டம்

எடின்பர்க்: ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் கடந்த சில நாட்களாகக் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு பிராந்தியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ஸ்காட்லாந்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் பனியினால், சாலைகள் முழுவதும் பனிப்பாளங்களால் மூடிக் காணப்படுகின்றன. மேலும், பனிமூட்டம் காரணமாக சாலையில் முன் செல்லும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவுக்குப் பார்வைத் தடை ஏற்பட்டுள்ளது.

இந்த மோசமான வானிலை காரணமாகச் சாலை விபத்துகளும் நடந்துள்ளன. தலைநகர் எடின்பர்க்கைச் சுற்றியுள்ள பகுதிகளில், சாலையில் நடந்து சென்ற இரண்டு பேர் மீது கார் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன்ஷையர் நகர சாலையில் சென்று கொண்டிருந்த மாடிப் பேருந்து (Double-decker Bus) ஒன்று, சாலைகளில் உறைந்திருந்த பனிக்கட்டிகளுக்கு நடுவே சிக்கி கொண்டது. இதனால், பேருந்தைத் தொடர்ந்து இயக்க முடியாமல் அங்கேயே நின்றது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து, சாலையில் இருந்த பனிக்கட்டிகளை அகற்றினர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே அந்தப் பேருந்து அங்கிருந்து புறப்பட்டது. இந்த மீட்புப் பணிகள் காரணமாக அந்தச் சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மையம், ஸ்காட்லாந்தின் வடக்கு பிராந்தியத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவிற்காக மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, வடக்கு பிராந்தியத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பனிப்பொழிவு சீரான பின்னரே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!