ஜப்பானில் கடும் பனிப்பொழிவு... 30 பேர் உயிரிழப்பு!
ஜப்பானில் வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரில் சிக்கி இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் மக்கள் வீட்டுக்குள் முடங்கிய நிலையில் உள்ளனர்.

அமோர் நகரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகி, சுமார் 2 மீட்டர் உயரம் வரை பனி தேங்கியுள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ முதல் சப்போரா வரை சாலைகளில் படிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் அரசு ஊழியர்களுடன் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

பனிப்பொழிவால் ஹொக்கைடோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ரயில் சேவைகள் தாமதமாகின. முக்கிய சாலைகளில் பனி படர்ந்ததால் தரை வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனியை அகற்றும் போது பனிக்கட்டிகள் விழுந்து பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
