உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து... 5 பேர் உயிரிழப்பு!

 
ஹெலிகாப்டர் விபத்து
 


உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்தரகாசி மாவட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கி தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேர் சம்பவ இடந்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ராணுவ வீரர்கள், பேரிடர் மேலாண்மை குழு, ஆம்புலன்ஸ், வருவாய் குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?