நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... ஆற்றில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்... 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

 
ஹெலிகாப்டர்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில்  3 குழந்தைகள் உட்பட 6 பேர்  பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஹட்சன் ஆற்றின் மீது லாங்ரேஞ்சர் ரக சுற்றுலா ஹெலிகாப்டர் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு  (அமெரிக்க நேரப்படி) பறந்து கொண்டிருந்தது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது.


இந்த விபத்தில், ஹெலிகாப்டரின் விமானி மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி மற்றும் 3 குழந்தைகளும் பலியாகி இருப்பதாக  அமெரிக்க விமானப் பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.ஹெலிகாப்டர் புறப்பட்டு 18 நிமிடங்களில் ஹட்சன் ஆற்றின் பியர் 40  பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர்

சுதந்திர தேவி சிலை உட்பட பல  பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை நோக்கி திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியான 6 பேரின் உடலும் மீட்கப்பட்டதாக நியூ யார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web