மோசமான வானிலை... தடுமாறிய ஹெலிகாப்டர் தனியார் கல்லூரியில் அவசரமாக தரையிறக்கம்!

 
ஹெலிகாப்டர்

கேரளாவில்  மோசமான வானிலை காரணமாக  கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.  கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான செடாக் ஹெலிகாப்டர் இன்று ஜூன் 19ம் தேதி  வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக  அந்த ஹெலிகாப்டர் தொடர்ந்து பறப்பதில் சிரமம் ஏற்பட்டு தடுமாறியதாகக் கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர்

 

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியின் கால்பந்து மைதானத்தில், அந்த ஹெலிகாப்டர் உடனடியாக  தரையிறக்கப்பட்டது. 

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர்


வானிலை சீரானதும் அந்த ஹெலிகாப்டர் மீண்டும் அதன் பயணத்தைத் தொடர்ந்து, நெடும்பசேரியிலுள்ள கடலோரக் காவல் படையின் விமானத் தளத்தில் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளது.  ஜூன் 15 ம் தேதியன்று உத்தரகண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது