அண்ணாமலை ஹெலிகாப்டரில் அதிரடி சோதனை.... தேர்தல் பறக்கும் படை அட்ராசிட்டி !
தமிழக சட்டசபை தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காரைக்கால் பகுதியில் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்காக அவர் தனியார் ஹெலிகாப்டர் மூலம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்திறங்கியபோது, அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த தேர்தல் பறக்கும் படையினர் ஹெலிகாப்டரை சுற்றி வளைத்தனர். அனுமதியின்றி ஏதேனும் கொண்டு வரப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் மேற்கொண்ட இந்த திடீர் நடவடிக்கையால் அந்தப் பகுதியே ஒரு நிமிடம் பரபரப்பானது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்களின் வாகனங்கள் மற்றும் பயணங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டருக்குள் புகுந்த அதிகாரிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த பைகள் மற்றும் உடைமைகளை ஒவ்வொன்றாகச் சோதித்தனர். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அடுத்தடுத்த ஊர்களுக்குப் பிரசாரத்திற்குச் செல்ல வேண்டியிருந்த சூழலில், அதிகாரிகளின் இந்த கிடுக்கிப்பிடி சோதனையை அண்ணாமலை அமைதியாக எதிர்கொண்டார். கடந்த சில நாட்களாகவே முக்கியத் தலைவர்களின் வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஹெலிகாப்டரிலும் சல்லடை போட்டுத் தேடியது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி கெடுபிடிகளால் அரசியல் கட்சியினர் எவ்வித நகர்வுகளை மேற்கொள்வதற்கும் பெரும் அச்சத்துடன் இருக்கும் நிலை உருவாகியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
