நடுவானில் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்… பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
ஹெலிகாப்டர்

 

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹாமண்டன் விமான நிலையத்திற்கு அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. மோதலின் தாக்கத்தில் இரு ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கின. சம்பவம் நடந்த இடத்தில் பெரும் புகைமூட்டம் காணப்பட்டது.

இந்த விபத்தில் ஒரு ஹெலிகாப்டர் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நடுவானில் மோதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!