பிரபல நடிகைக்கு ஸ்டார் ஹோட்டல் மகனால் தொல்லை?!

 
க்ரீத்தி ஷெட்டி

”உபென்னா” படத்தின் மூலம் விஜய்சேதுபதியுடன்  நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் தமிழில்   தி வாரியர், கஸ்டடி   படங்களில் நடித்தவர். இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் படத்தில்  நடித்து  தனிப்பட்ட  காரணங்களால் அந்த படத்தில்  இருந்து வெளிவந்து விட்டார். தற்போது  ஜெயம் ரவியுடன் அடுத்து ஜீனி படத்தில்  நடித்து வருகிறார்.

க்ரீத்தி ஷெட்டி

இந்நிலையில்  க்ரித்தி ஷெட்டிக்கு ஸ்டார் ஹீரோ ஒருவரின் மகன் டார்ச்சர் செய்து வருவதாக சமூக வலைதளங்களில்செய்திகள் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  நடிகை க்ரித்தி ஷெட்டி 15 வயதிலேயே ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.   தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில்   அஜயண்டே ரண்டாம் மோஷனம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.   தி வாரியர், கஸ்டடி படங்கள்  எதிர்பார்த்த வகையில் வரவேற்பு பெறவில்லை தற்போது தமிழில் ஜெயம் ரவியின் 100 கோடி பட்ஜெட் படமான ஜீனி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  

க்ரீத்தி ஷெட்டி

வாமிகா காபி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி உட்பட பல முண்ணனி நட்சத்திரங்கள் ஜீனி படத்தில் களமிறங்கியுள்ளனர்.  இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில், பிரம்மாண்டமாக போடப்பட்டது. க்ரித்தி ஷெட்டி செல்லும் இடங்களுக்கு எல்லாம் பிரபல நடிகரின் மகன் ஒருவர் வருவதாகவும், அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நடிகையை வரச் சொல்லி லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  தற்போது  அதுகுறித்து மனம் திறந்து குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில் இந்த வதந்தி ஆதாரம் இல்லாத வதந்தி ,  தன்னை எந்த நடிகரின் மகனும் அப்படி டார்ச்சர் செய்யவில்லை  .   விஷயம் பெரிதான நிலையில், அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளேன் எனக் கூறியுள்ளார். கிர்த்தி ஷெட்டியின் இந்த பதிவு பல அதிரடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளீ வைத்துள்ளது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web