’ஹே எப்புட்றா’.. மாயமான செல்போன் டவர்.. கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் எருமபாளையம் சாலையில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான செல்போன் டவர், 2016-ல் ரூ.18.75 லட்சம் செலவில் நிறுவப்பட்டது. பின்னர், 2018-ல் செல்போன் நிறுவனம் மூடப்பட்டு, செல்போன் டவர் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. இந்நிலையில், ஜனவரி 31-ம் தேதி எருமபாளையம் பிரதான சாலையில் உள்ள செல்போன் டவரை ஆய்வு செய்ய செல்போன் டவர் நிறுவன அதிகாரி தமிழரசன் (35) வந்தார்.
அங்குள்ள செல்போன் டவர் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழரசன், கிச்சிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், மர்ம நபர்கள் படிப்படியாக செல்போன் டவரை அகற்றி திருடி வருவது தெரிய வந்துள்ளது. செல்போன் டவர் இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து, மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!