திருமணத்தை மறைத்து 2வது திருமணம்... இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்த கணவர்!

 
திருமணம் காதல் கள்ளக்காதல்

திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருந்த பெண் ஒருவர், முதல் திருமணத்தை மறைத்து இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒருவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்த முதல் கணவர் இரண்டாவது கணவர் வீட்டுக்குச் சென்று சண்டையிட்டதால், இரண்டு கணவர்களாலும் நிராகரிக்கப்பட்ட அந்தப் பெண் குழந்தைகளுடன் நிர்கதியாக நின்ற சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயதுப் பெண் ஒருவர், தனது 15 வயது மகளையும், 13 வயது மகனையும் பெற்றோரின் பராமரிப்பில் விட்டுவிட்டுச் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தச் சூழலில், கடந்த ஓராண்டுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலத்தைச் சேர்ந்த 34 வயது என்ஜினீயர் ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த அந்த என்ஜினீயரிடம், தனக்கு 30 வயதுதான் ஆகிறது என்றும், இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் அந்தப் பெண் முதல் திருமணத்தை மறைத்து ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

திருமணம்

இதையடுத்து காதலர்கள் இருவரும் கடந்த 30ம் தேதி பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததும், மணமக்கள் இருவரும் தங்களது திருமணப் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இந்த பதிவுகளைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த முதல் கணவர், தனது மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு நேரடியாகப் பாண்டமங்கலத்திற்குச் சென்று, இரண்டாவது கணவர் வீட்டுக்கு வந்து அந்தப் பெண்ணைத் சரமாரியாகத் தாக்கினார். சத்தம் கேட்டு விசாரித்த இரண்டாவது கணவர் மற்றும் உறவினர்களுக்கு, புதுப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

5வது திருமணம்

உடனே அவர்கள் அனைவரும் அந்தப் பெண்ணை பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தன்னை ஏமாற்றித் திருமணம் செய்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தாலிச் சங்கிலியைப் புதுமாப்பிள்ளை பெற்றுக்கொண்டார். இருப்பினும், அந்தப் பெண்ணுக்காக இதுவரை ரூ.5 லட்சம் வரை செலவு செய்து ஏமாந்து விட்டதால், இனி அவள் வேண்டாம் என்று ஏமாற்றத்துடன் புறப்பட்டுச் சென்றார்.

அதேபோல், இரண்டாவது திருமணம் செய்த அந்தப் பெண் தனக்கும் வேண்டாம் என்று கூறி, தனது குழந்தைகளை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு முதல் கணவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். தனது பேராசையால் இரண்டு கணவர்களையும் இழந்து நிர்கதியாக நின்ற அந்தப் பெண்ணை, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுபோன்று செயல்களில் மீண்டும் ஈடுபடக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!