வேதாந்தா நிறுவனத்திற்கு பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

 
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் மூட உத்தரவு!

தமிழ்நாட்டில் புதிய பசுமை தாமிர உற்பத்தி ஆலையை அமைக்க விண்ணப்பிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வழக்கு நிலுவையில் இருந்தாலும், புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதில் எந்தத் தடையும் இல்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

காற்று, நீர், நிலம் மாசு காரணமாக 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றமும், பின்னர் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தன. இதனைத் தொடர்ந்து, பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் புதிய வழக்கை தொடர்ந்தது.

ஸ்டெர்லைட்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிய பசுமை தாமிர ஆலைக்கு உரிய துறைகளிடம் விண்ணப்பிக்க வேதாந்தாவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதில் எந்த சட்ட தடையும் இல்லை எனக் கூறிய நீதிமன்றம், வழக்கின் மேலான விசாரணையை பின்னர் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!