கார் கதவு திறந்த போது வாகனம் மோதி உயர்நீதிமன்ற வக்கீல் பலி... பெரும் சோகம்!
பெங்களூரு உல்லால் பகுதியில் சாலையோரம் கார் நிறுத்தி இறங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீஷ், அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று காலை 11 மணியளவில் உல்லால் 80 அடி சாலையில் நடந்த இந்த கோர விபத்து, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காரின் ஓட்டுநர் இருக்கை கதவைத் திறந்து சாலையில் நின்றிருந்தபோது, பின்னால் மின்னல் வேகத்தில் வந்த கார் பலத்த சத்தத்துடன் மோதியது. காரின் கதவோடு சேர்த்து பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட ஜெகதீஷ், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.

தகவலறிந்த பைதரஹள்ளி போக்குவரத்துப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த இறுதியாண்டு பொறியியல் மாணவர் சுஹாஸை கைது செய்தனர். கார் மிக அதிவேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், மது போதையில் வாகனம் ஓட்டினாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
