உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு... கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சோனாங்குப்பத்தில் வசித்து வருபவர் சுரேஷ், கடலூர் அகரம் கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி ஆகியோர் தங்கள் ஊர் கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், போலீசாரின் அனுமதி மறுப்பு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நிபந்தனைகளுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும். நிகழ்சியின் போது போலீஸ் பாதுகாப்புக்காக மனுதாரர்கள் தலா ரூ.10000 வழங்கவேண்டும். ஆபாச நடனங்கள், வசனங்கள் இடம் பெறக்கூடாது.
சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ வைக்ககூடாது . சாதி, மத வேற்றுமை இல்லாமல் அமைதியான முறையில் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறினால், சட்டப்படியான நடவடிக்கையை உடனடியாக போலீசார் எடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தான்டி நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்ககூடாது. இதுதவிர போலீசார் விரும்பினால் மேலும் சில நிபந்தனைகளை விதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!