நடிகர் கார்த்தி நடித்த படத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!
நடிகர் கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ திரைப்படம், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது. கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பு, சத்யராஜ் மற்றும் ராஜ் கிரண் உள்ளிட்டோரின் நடிப்பு என படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இது வருகிற 12ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.
8 Days to Vibe with our Vaathiyaar 🪙💥#VaaVaathiyaar Worldwide Release on December 12 #VaaVaathiyaarOnDec12 #VaathiyaarVaraar
— Studio Green (@StudioGreen2) December 4, 2025
A #NalanKumarasamy Entertainer
A @Music_Santhosh Musical @Karthi_Offl @VaaVaathiyaar #StudioGreen @gnanavelraja007 @IamKrithiShetty #Rajkiran… pic.twitter.com/aLyYG64GEk
இதற்கிடையில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் திவாலானவர் என 2014ல் அறிவிக்கப்பட்டபோது, அவரது சொத்துகளை நிர்வகிக்க நீதிமன்றம் சொத்தாட்சியரை நியமித்தது. அந்த அர்ஜுன்லாலிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் 10 கோடி 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாக மனு தாக்கல் செய்யப்பட்டது. வட்டியுடன் சேர்ந்து அந்தத் தொகை தற்போது 21 கோடி 78 லட்சம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை அதை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது. மேலும், ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியாகக் கூடாது என்றும், படத்தின் வருமானத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ‘வா வாத்தியார்’ படத்தை இன்று (டிசம்பர் 5) வரை வெளியிடக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், படத்தின் வெளியீடு குறித்த தெளிவு அன்றைய தீர்ப்புக்குப் பிறகே தெரியவிருக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
