31 வார கருவைக் கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

 
கேரளா

கேரள உயர் நீதிமன்றம் 31 வாரக் கருவில் மூளையில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், கருவைக் கலைக்க தம்பதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவ வாரியத்தின் அறிக்கையைத் தொடர்ந்து, குழந்தையாக பிறந்தால் மிகவும் மோசமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என கூறப்பட்டதால் இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி

மருத்துவ அறிக்கையில், கருவை தொடர்வது கர்ப்பிணியின் மனநலையும் உடல்நலையும் கடுமையாக பாதிக்கும் என்றும், எனவே கருக்கலைப்பு அவசியம் என்று குறிப்பிட்டிருந்தது. நீதிபதி அனைத்து அடிப்படை தகவல்களையும், மருத்துவ பரிந்துரைகள் மற்றும் சட்ட விதிகளையும் ஆராய்ந்த பிறகு, குடும்பத்தின் துயரத்தை நீட்டிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு கருவைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றம், மருத்துவக் குழுவை கருவைக் கலைக்கும் முன்பு மீண்டும் ஸ்கேன் செய்து, மூளை வளர்ச்சியில் குறைபாடு உறுதி செய்யும்படி குறிப்பிட்டுள்ளது. குழந்தை உயிருடன் பிறந்தால் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்; குழந்தையின் நிலை மற்றும் சிகிச்சைக்கு பெற்றோர் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவு கூறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!