அதிர்ச்சி... உதகையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்!

சமீப காலங்களாக தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களிலும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், கஞ்சா விற்பனையிலும், கஞ்சா பயன்படுத்துபவர்களாகவும், பெரும்பாலான குற்ற செயல்களிலும் இளைஞர்கள் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.
பெரும்பாலான குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும், கஞ்சா போதையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரிய வந்துள்ள நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக உதகையில் விற்பனைக்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.உயர் ரக கஞ்சா விற்பனை செய்த அப்துல் வகாப் (34), சுஜன் (35), மெல்சர் -பால் (35), லக்கி ராஜ் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!