பிரபல ரவுடியை சுட்டுப்பிடிக்க போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவு !

மதுரை மாவட்டத்தில் வரிச்சியூர் கிராமத்தில் வசித்து வருபவர் வரிச்சியூர் செல்வம். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில், கோவையில் கட்டப்பஞ்சாயத்துக்காக தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆயுதங்களுடன் வரிச்சியூர் செல்வம் சென்றதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்கும்படி போலீசாருக்கு காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதனையடுத்து மதுரை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை பிடிக்க தனிப்படையினர் பொள்ளாச்சியில் முக்கிய பகுதிகளில் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!