பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி அட்டவணை வெளியீடு!

 
மாணவிகள்

தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா. சுதன் அவர்கள், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான ஜனவரி மாதப் பாடத்திட்டத்தை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.

ஜனவரி மாதப் பயிற்சியில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்:

மாணவர்கள் தங்கள் விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்கவும், தேர்வுகளைப் பயமின்றி எதிர்கொள்ளவும் இந்த மாதம் கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படும்: தேர்வு அறையில் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்வது மற்றும் நேர மேலாண்மை குறித்த ஆலோசனைகள்.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

சட்டத் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் எல்.எல்.பி (LLB) சேருவதற்கான வழிமுறைகள். கலை மற்றும் சமூக அறிவியல் படிப்புகளில் உள்ள நவீன வேலைவாய்ப்புகள். வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையில் உள்ள கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள். பிளஸ் 2-விற்குப் பிறகு மாணவர்கள் சேரக்கூடிய பல்வேறு நுழைவுத் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல்.

2023-24 கல்வியாண்டில் வழங்கப்பட்ட நான் முதல்வன் கையேடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வகுப்புகள் நடைபெறும். அந்தந்த பள்ளிகளில் உள்ள 'உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி' ஆசிரியர்கள் இந்த வகுப்புகளை வாரம் வாரியாக நடத்த வேண்டும். மாணவர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் முழுமையாகப் பயனடைவதை உறுதி செய்யத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!