ஏசி ரூமுக்குள் கஞ்சா தோட்டம்..!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
கஞ்சா

வீட்டில் தனி அறையில் ஏசி போட்டு கஞ்சா வளர்த்து வந்த இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னையில் உள்ள ரிசாட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் விலை உயர்ந்த கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து களத்தில் இறங்கினர் போலீசார்.

அதன்படி, போலீசாரே வாடிக்கையாளர்கள் போன்று நடித்து,கஞ்சா வாங்குவது போல் வியாபாரிகளிடம் சென்றனர். அவர்கள் கஞ்சா வாங்கசென்று விற்பவர்களை பிடித்து விசாரித்த போது, மாடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து மொத்த விற்பனையாக வாங்கி விற்று வருவதாக பிடிபட்டவர்கள் தெரிவித்தார். இதையடுத்து குறிப்பிட்ட அடுக்குமாடிக்குடியிருப்பை போலீசார் சுற்றி வளைத்தனர்.

கஞ்சா

அதனைத் தொடர்ந்து குடியிருப்பில் பதுங்கியிருந்த சக்திவேல், ஷ்யாம் சுந்தர், ஸ்ரீகாந்த் மற்றும் நரேந்திரகுமார் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அப்போது வீட்டில் சோதனையிட்ட போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உயர் ரக கஞ்சா செடிகளை கொடைக்கானல் போல் அறையை செட் செய்து, 24 மணி நேர ஏசி கூலிங்கில் வளர்த்து வந்ததைக் கண்டுபிடித்தனர். பிடிபட்டவர்களில் முக்கிய நபரான சக்திவேல் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

கஞ்சா வளர்ப்பது குறித்து யூடியூப்பில் பார்த்து தெரிந்து கொண்டு இவ்வாறு செய்து வந்துள்ளார். 10க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை 4 அடி உயரத்திற்கு வளர்த்துள்ளார். சூரிய ஒளி படாமல் கொடைக்கானல் கிளைமேட்டில் வளர்க்க வேண்டும் என்பதற்காக எல்.இ.டி. விளக்குகள் அமைத்து செடிகளுக்கு 24 மணி நேரம் ஏசி கூலிங்கை பயன்படுத்தியுள்ளார்.

கஞ்சா

செடிகளுக்கு தண்ணீர் வழங்க தானியங்கி மோட்டார்களை பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் 10க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை 4 அடி உயரத்திற்கு வளர்த்துள்ளார். கஞ்சா செடியின் வாசனை பக்கத்து வீடுகளுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு யுக்திகளையும் கையாண்டுள்ளார். செடியிலிருந்து கிடைத்த இழைகளை சிலிக்கான் பைகளில் அடைத்து நவீன முறையில் பதப்படுத்தி சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இதுமட்டுமின்றி சக்திவேல் போதை ஸ்டாம்புகளையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். ஆன்லைன் விற்பனைக்கு ரயில்வேயில் வேலை செய்து வந்த ஷ்யாம் சுந்தர், நரேந்திரகுமார் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் உதவியை நாடியுள்ளார்.

அவர் கடந்த 4 ஆண்டுகளாக பக்கத்து வீட்டினருக்குக் கூடத் தெரியாமல் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள், 356 போதை ஸ்டாம்புகள் மற்றும் 3 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web