திருமா நெத்தியடி... இந்தி பேசுறவங்களே தமிழ்நாட்டுக்கு தான் வேலை தேடி வாரங்க... !

 
திருமா
 தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவர் முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி எனக் கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்றனர் எனக் கூறினர்.இதற்கும் சேர்ந்து திமுகவை சேர்ந்தவர்கள் கண்டனங்களை தெரிவித்து பேசி வருகின்றனர்.  மற்றொரு பக்கம் மத்திய அரசை சேர்ந்தவர்கள் இந்தி படித்தீர்கள் எனில்  நல்ல வேலை கிடைக்கும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

தர்மேந்திர பிரதான்

இதனையடுத்து, இந்தி பேசக்கூடியவர்களே தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் உண்மை என  விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து திருமா ” தமிழ்நாட்டுக்கு இருமொழிக்கொள்கை என்பது போதுமானது. இரு மொழிகொள்கையை நடைமுறைப்படுத்துவது தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இந்திய மக்களுக்கும் ஒற்றுமைக்கும் ஏற்புடையதாக இருக்கும். எனவே மும்மொழி கொள்கையை எப்போதும் தமிழ்நாடு எதிர்க்கும். பாஜகவை சேர்ந்தவர்கள் எதோ இந்தியை படித்தால் தான் வேலை கிடைக்கும் என சொல்கின்றனர்.  

பாஜகவிற்கு தோல்வி பயம்! தொல்.திருமா அனல் பறக்கும் குற்றச்சாட்டு!


இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலை கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.  ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலே அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்தி பேசக்கூடியவர்களே வேலையில்லாமல் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார்கள். இப்படி இருக்கையில் ஒரே தேசம்…ஒரே மொழிகொள்கையை எதிர்காலத்தில் உருவாக்கம் பாஜக முயற்சி செய்கிறார்கள். அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web