15 நாட்களில் 4 வது துயரம்... வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்தே கொலை!
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன. சமீப காலமாக அங்கு இந்துக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் அச்சத்தை அதிகரித்துள்ளன.
கடந்த டிசம்பர் 18-ம் தேதி மைமன்சிங் பகுதியை சேர்ந்த தீபு சந்திரா அடித்துக் கொல்லப்பட்டார். டிசம்பர் 24-ம் தேதி ராஜ்பாரி பகுதியை சேர்ந்த அம்ரித் மண்டல் கொலை செய்யப்பட்டார். டிசம்பர் 29-ம் தேதி மைமன்சிங் பகுதியை சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், ஜெஸ்ஸோர் மாவட்டம் ஆருவா கிராமத்தை சேர்ந்த ராணா பிரதாப் (35) என்பவர் நேற்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஒரு முன்னணி நாளிதழில் மூத்த ஆசிரியராக பணியாற்றி வந்தவர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
