வங்கதேசத்தில் இந்து தொழிலதிபர் கொலை… சிறுபான்மையினருக்கு அச்சம்!

 
வங்கதேசம்
 

வங்காளதேசத்தின் மைமன்சிங் மாவட்டம் திரிஷால் பகுதியில் 60 வயதான இந்து தொழிலதிபர் சுஷென் சந்திர சர்க்கார் மர்ம நபர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று அவரது மகன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால் நேரில் சென்று பார்த்துள்ளார்.

அப்போது சுஷென் உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மைமன்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை திரிஷால் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹசன் இஸ்ராப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த கொலையின் காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மைமன்சிங் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இந்து சிறுபான்மையினர் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வங்காளதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!