இந்து ஆசிரியர் வீட்டை தீக்கிரையாக்கிய கொடூரம்... வங்கதேசத்தில் தொடரும் வன்முறை!

 
வங்கதேசம்
 

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றதிலிருந்து, சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தொடர்ச்சியான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜனவரி 5 வரை 45 மாவட்டங்களில் 116 கொலைகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 51 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சமீப கால தாக்குதல்களில் 8 இந்துக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, கோவில் சூறையாடல், பாலியல் வன்கொடுமை முயற்சி என இந்துக்களின் வாழ்க்கை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. போலி மதக் குற்றச்சாட்டுகள் சுமத்தி இந்து குடும்பங்கள் துன்புறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வங்கதேசம்

இந்த நிலையில், இந்து சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் பிரேந்திர குமார் டே வீட்டை மர்ம கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நடக்கும் தாக்குதல்கள் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!