வங்கதேசத்தில் தொடரும் இந்துக்கள் படுகொலை… மீண்டும் உயிரிழந்த தொழிலதிபர்!
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை பல்வேறு பகுதிகளில் இந்துக்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். பிரந்தோஷ், ஜோகேஷ் சந்திர ராய், சாந்தோ சந்திர தாஸ், திபு சந்திர தாஸ், அம்ரித் மண்டல், பஜேந்திர பிஸ்வாஸ் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காஜிபூரில் இந்து தொழிலதிபர் லிட்டன் சந்திர கோஸ் (55) நடத்தி வந்த ஓட்டலுக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக ஸ்வாபன் மியா, அவரது மனைவி மஜிதா, மகன் மசூம் மியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குமூலத்தில், ஓட்டல் ஊழியர் ஒருவர் வாழைப்பழம் திருடியதாக சந்தேகித்தே தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு இந்துக்கள் மீது நடக்கும் தாக்குதல்களை தடுக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் இதை கடுமையாக சுட்டிக்காட்டி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
