வரலாற்று வெற்றி... 10 ஆண்டுகளுக்குப் பின் தொடரைக் கைப்பற்றிய இந்திய மகளிர் அணி!

 
மகளிர் ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட்

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நேற்று அடிலெய்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கத்திலேயே ஷபாலி வர்மாவை (7) இழந்தாலும், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி ஆஸ்திரேலியப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா 55 பந்துகளில் 82 ரன்கள் (8 பவுண்டரி, 3 சிக்ஸர்). ஜெமிமா ரோட்ரிக்ஸ் 46 பந்துகளில் 59 ரன்கள். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது. இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் நெருக்கடி கொடுத்தனர். ஆஷ்லே கார்ட்னர் (57) போராடிய போதிலும், மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இந்தியத் தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றியைத் தடுத்தனர்.

ஸ்மிருதி மந்தனா

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. கடைசியாக 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றிருந்த இந்திய அணி, சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தச் சாதனையை ஆஸ்திரேலிய மண்ணிலேயே நிகழ்த்திக் காட்டியுள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!