அதிர்ச்சி... ஒரே மாவட்டத்தில் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு… சுகாதார துறை தீவிர கண்காணிப்பு!
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே இந்த பாதிப்பு கண்டறியப்பட்டதால் சுகாதார துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கார்பரேட் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் பணியிடங்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த மாவட்டத்தில் 50 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்த நிலையில், தற்போது அது 90 ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்பற்ற உறவுகள் காரணமாக இந்த பாதிப்பு அதிகம் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோய் பரவிய விதம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் எச்ஐவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி ஜெயராம் ஹெம்பிரோம் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
