சென்னையில் ஹாக்கி திருவிழா… இன்று தொடங்கும் இந்தியா லீக்!

 
hockey

ஐ.பி.எல். பாணியில் தொடங்கப்பட்ட ஆக்கி இந்தியா லீக், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரசிகர்களை கவர வருகிறது. 2013-ல் அறிமுகமான இந்த தொடர், 2017 வரை 5 சீசன்கள் நடைபெற்றது. பின்னர் இடைநிறுத்தப்பட்ட போட்டி, கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கி பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் 7-வது ஆக்கி இந்தியா லீக் இன்று முதல் 26-ந்தேதி வரை சென்னை, ராஞ்சி, புவனேஸ்வர் நகரங்களில் நடைபெறுகிறது. முதற்கட்ட போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ்நாடு டிராகன்ஸ், பெங்கால் டைகர்ஸ், கலிங்கா லான்சர்ஸ், ராஞ்சி ராயல்ஸ், சூர்மா ஹாக்கி கிளப், ஐதராபாத் டூபான்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை தலா ஒரு முறை சந்திக்கும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப்புக்கு முன்னேறும். இன்று இரவு 7.30 மணிக்கு தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ், ஐதராபாத் டூபான்ஸை எதிர்கொள்கிறது. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றியுடன் தொடங்க தமிழ்நாடு அணி தீவிரமாக களமிறங்குகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!