ஹாக்கி லீக்... சூர்மா கிளப்பை வீழ்த்தி தமிழ்நாடு அதிரடி வெற்றி!
8 அணிகள் பங்கேற்கும் 7-வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி, சூர்மா ஹாக்கி கிளப்பை எதிர்கொண்டது. போட்டி தொடக்கம் முதலே இரு அணிகளும் வேகமாக விளையாடின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது. கடைசி வரை போராடிய அந்த அணி 3-2 என்ற கணக்கில் சூர்மா கிளப்பை வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் தமிழ்நாடு அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் எச்.ஐ.எல். ஜி.சி மற்றும் பெங்கால் டைகர்ஸ் அணிகள் மாலை 5 மணிக்கு மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் டூபான்ஸ் மற்றும் ராஞ்சி ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
