ஹோலி கொண்டாட்டம்... பெங்களூரு-விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள்!

 
ரயில்


இந்தியாவில் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி  பெங்களூரு-விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு, தென்மேற்கு ரயில்வே இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ரயில்

அதில்  ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பெங்களூருவில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசாகப்பட்டினம் - எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரயில் (வண்டி எண்: 08549) மார்ச் 16 மற்றும் 23-ந்தேதிகளில் விசாகப்பட்டினத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.

ரயில்

மறுமார்க்கமாக எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-விசாகப்பட்டினம் சிறப்பு ரெயில் (08550) மார்ச் 17 மற்றும் 24ம் தேதிகளில் பெங்களூருவில் இருந்து பிற்பகல்  3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல்  12.30 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் இருமார்க்கமாகவும் தவ்வாடா, அனகபல்லே, சாமல்கோட், ராஜமுந்திரி, எலுரா, விஜயவாடா, ஒங்கோலா, நெல்லூர், கூடூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கே.ஆர்.புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web