விடுமுறை தினம்... திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்... 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

வார விடுமுறை தினம் என்பதால் நேற்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அவ்வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏரளாமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து கடலில் புனித நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!