நாளை மறுநாள் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவதார நாள் விழா விமர்சையாக நடைபெறுகிறது. தென் மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், தென்காசி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். ஊர்வலங்கள், சிறப்பு வழிபாடுகள் என ஆன்மீக உற்சாகம் காணப்படும்.

இந்த ஆண்டின் 194வது அவதார திருவிழா மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகள், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இந்த விடுமுறைக்கு உட்படமாட்டார்கள். திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடுமுறை செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாததால் வங்கிகளுக்கு பொருந்தாது. கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். விடுமுறைக்கான ஈடாக மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
