3 நாட்கள் தொடர் விடுமுறை... மாணவர்கள் குஷியோ குஷி!

 
விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மகிழ்ச்சி அதிகம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மாசி மாத தேர்த்திருவிழா மார்ச் 9ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாப்பூர்

கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை. எனவே வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!