தமிழகத்தில் 45 நாட்கள் கோடை விடுமுறை - முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான முழு ஆண்டுத் தேர்வு மற்றும் கோடை விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 1ம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட உள்ளன.

தேர்வு அட்டவணை விபரங்கள்:
6 முதல் 9-ஆம் வகுப்பு வரை: இந்த மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெறும்.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை: தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும்.
தேர்வுகள் முடிந்த கையோடு, மாணவர்களுக்குப் பெரிய ஜாக்பாட் காத்திருக்கிறது. வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 1-ஆம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அன்றே மாணவர்களுக்குப் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது கோடைக்காலச் சுற்றுலாத் திட்டங்களை இப்போதே வகுக்கத் தொடங்கியுள்ளனர். "தேர்வுக்குத் தயாராகப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றித் தேர்வை எதிர்கொள்ளலாம்" எனத் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
