கொண்டாடுங்க மாணவர்களே!! ஏப்ரல் 5 ம் தேதி இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

பங்குனி உத்திரம் தமிழகம் முழுவதும் அனைத்து சிவன் மற்றும் முருகன் ஆலயங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டில் பங்குனி உத்திர  திருநாள் ஏப்ரல்  5ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.ஏற்கனவே சில மாவட்டங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தென்காசி மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறை பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கொண்டாடப்பட வேண்டும். மேலும்  பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

அரசு விடுமுறை தினங்களைத் தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள் , திருவிழாக்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் நடப்பாண்டில் ஏப்ரல் 5ம் தேதி பங்குனி உத்திர திருவிழா திருநெல்வேலியில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருநெல்வேலியில் இந்த திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த விடுமுறை அனுசரிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏப்ரல் 5 ம் தேதி அரசு பொதுத்தேர்வுகள் இருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வில் கலந்து கொள்ள உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

உள்ளூர் விடுமுறை

மேலும் விடுமுறை நாளில் நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இன்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார் நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் குறித்து  அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்   எனவும் அறிவித்துள்ளார்.. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web