பிரபல ஹாலிவுட் நடிகை ஏமி ஷூமர் விவாகரத்து!
அமெரிக்க ஹாலிவுட் பிரபல நகைச்சுவை நடிகை ஏமி ஷூமர், கடந்த 2018ம் ஆண்டு சமையல் கலைஞர் கிரிஸ் ஃபிஷருடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜீன் என்ற 6 வயது மகன் உள்ளார். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகியதால், கடந்த டிசம்பர் 12ம் தேதி அவர்கள் பிரிய உள்ளதாக அறிவித்தனர்.
நியூயார்க் நீதிமன்றத்தில் நேற்று ஏமி ஷூமர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து மனு தாக்கல் செய்தார். இது இருவரின் பரஸ்பர சம்மத மனு என்பதாகும். சொத்து பிரிவுகள் மற்றும் குழந்தை வளர்ப்பு தொடர்பான நிபந்தனைகள் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளன.

நெருங்கிய வட்டாரங்கள் கூறுவது, மகனின் எதிர்காலம் மற்றும் நலனுக்காக இருவரும் நட்புடன் குழந்தையை வளர்க்கும் முடிவுக்கு வந்துள்ளனர். முன்னதாக ஏமி ஷூமர் சமூக வலைதளத்தில், “எந்த வருத்தமும் இல்லை, இது சுய கவனிப்பு மற்றும் சுய அன்பிற்கான ஆண்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
