பிரபல ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஓ’ஹாரா காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

 
hollywood

பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகை கேத்தரின் ஓ’ஹாரா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 71. நகைச்சுவை பாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பால் உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகை கேத்தரின், ‘Home Alone’, ‘Beetlejuice’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததற்காக ரசிகர்களால் இன்றளவிலும் கொண்டாடப்படுகிறார். 

பிரைம் டைம் எம்மி விருது, கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள நடிகை கேத்தரின் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது தனிப்பட்ட நகைச்சுவை கதாபாத்திரங்களால் நடிப்பு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றிருந்தார். 

இவரது மறைவு ஹாலிவுட் திரையுலகிற்கு பெரிய இழப்பு என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிசடங்கில் ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!