பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ரன்யான் காலமானார்... !
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ரன்யான் புற்றுநோய் காரணமாக காலமானார். அவருக்கு வயது 65. அவரது மறைவை நெருங்கிய தோழி எரின் மர்பி சமூக வலைத்தளம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்தி திரையுலகிலும் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1980-களில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ஜெனிபர் ரன்யான் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’ திரைப்படம் மற்றும் ‘சார்லஸ் இன் சார்ஜ்’ தொடர் மூலம் அவர் பெரும் புகழ் பெற்றார்.

மேலும் ‘18 அகைன்!’ மற்றும் ‘குவாண்டம் லீப்’ உள்ளிட்ட பல படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பு மற்றும் தனித்துவமான பாணியால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகையாக ஜெனிபர் ரன்யான் நினைவுகூரப்படுகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
