தவெகவுக்கு ஊர்க்காவல் படையினர் கோரிக்கை... !
தமிழகத்தில் 16,500 ஊர்க்காவல் படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். தற்போது மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்களும், அதிகபட்சம் 15 நாட்களும் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. ஒருநாள் பணிக்கு ரூ.560 ஊதியம் வழங்கப்படுவதால், அதிகபட்சமாக மாதம் ரூ.8,400 மட்டுமே கிடைக்கிறது. மேலும், ஊதியம் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விலைவாசி உயர்வு காரணமாக இந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்துவது கடினமாக இருப்பதாகவும் ஊர்க்காவல் படையினர் தெரிவிக்கின்றனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பணி நாட்களை அதிகரித்து, ஊதியத்தை உயர்த்துவோம் என்று திமுக அறிவித்திருந்தாலும், இதுவரை கோரிக்கைகள் நிறைவேறவில்லை என அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், திருச்சியில் பிப்.9-ம் தேதி நடைபெற்ற தவெக தேர்தல் அறிக்கைத் தயாரிப்பு குழு கருத்துக்கேட்பு கூட்டத்தில், அருண்ராஜ் தலைமையில் ஊர்க்காவல் படையினர் மனு வழங்கினர்.

அதில், மாதத்திற்கு குறைந்தது 25 நாட்கள் பணி வழங்க வேண்டும், நாளொன்றுக்கு ரூ.1,000 ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், விபத்தில் உயிரிழந்தால் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், ஓய்வுக்குப் பின் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மேலும் தமிழக காவல்துறையைப் போல தோள்பட்டை பேட்ஜ், சீருடை மற்றும் காலணிகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், வரும் பட்ஜெட்டில் தங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வராவிட்டால், தவெகவின் தேர்தல் அறிக்கையில் கோரிக்கைகள் இடம்பெற்றால், ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தவெகவுக்கு ஆதரவளிப்பார்கள் என மனு வழங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
